கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆரம்பம்…
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 20 ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரிஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.