திருவிழாவில் ஏற்பட்ட தகராறு.. 6 பேர் காயம்..
ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா அருகே உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயத்தின் தேர் ஊர்வல நிகழ்வின் போது தகராறு ஏற்பட்டது.
அதில் அப்பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி சாந்தி கோகுல் அனுஜி ராஜ்குமார் நர்மதா ஆகிய ஆறு நபர்கள் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 6 நபர்களின் மீது தாக்குதல் நடத்திய அப்பகுதியை சேர்ந்த பிரசாந்த் அப்பு எழில் ஹரி கிருஷ்ணன் நவீன் உட்பட மேலும் சில நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாலாஜா காவல் நிலையத்தில் புகார் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்