மறைந்தும் வாழும் மாணவன்..!!
விபத்தில் மூளைச்சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது…
வேலூர் மாவட்டம், பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 11 ஆம் தேதி விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மொடையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் மகன் தமிழ்வாணன் (வயது 20 ) இவர் ஸ்ரீ பெரும்புதூர் தனியார் கல்லூரியில் பி.டெக் 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அம்மாபாளையம் என்ற இடத்தில் விபத்தில் பலத்த காயமடைந்தார்.. பின்னர் சிஎம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாணவர் தமிழ்வாணனுக்கு முளைசாவு ஏற்பட்டதை அடுத்து நேற்று அவரது உடல் உறுப்புகள் உறவினர்களின் ஒப்புதலின் படி தானமாக வழங்கப்பட்டது.
இதில் சிறுநீரகம், கண்கள் சி.எம்சி மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை எம்,ஜிஎம் மருத்துவமனைக்கும், தானமாக வழங்கப்பட்டது..