“இயக்குனர் சொன்ன தலைப்பு எனக்கு வந்தது மலைப்பு”.., டி.ஆர்.ராஜேந்திரன் படத்தின் அடுத்த அப்டேட்..!!
சி.ஆர்.டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம்.., எழுத்து இயக்கம் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் தான் “நான் கடைசி வரை தமிழன்”.. இந்த திரைப்படத்திற்கு டி.ஆர்.ராஜேந்திரன் இசையமைத்துள்ளார், மேலும் சில பாடல்களும் அவர் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் நடிகர், நடிகை மற்றும் துணை நடிகர்கள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய இயக்குனர் எம்.ஏ.ராஜேந்திரன், “நான் கடைசிவரை தமிழன்” படத்தின் கதை மிகவும் மாறுபட்ட விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை ஒரு விஞ்ஞானி. மகன் ஒரு ராணுவ வீரன். இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள். எதற்காக, ஏன் என்பது தான் கதை.
இவர்களை தொடர்ந்து பேசிய டி.ஆர்.ராஜேந்திரன் “இந்தப் படத்துக்கு “நான் கடைசி வரை தமிழன்” என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம்.ஏ.ராஜேந்திரன் சொன்னார், ராஜேந்திரன் என்று சொன்னாலே “திறன்”. அந்த திறன் இந்த ராஜேந்திரனிடம் இருக்கிறது. பண்ணாரி அம்மன் படத்திற்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன்.
இந்த படத்திற்கு நான் இசையமைக்க சம்மதித்த காரணம் படத்தின் டைட்டில் நான் தமிழன் என்பது தான் “இயக்குனர் சொன்னது தலைப்பு எனக்கு வந்தது மலைப்பு” இந்த படம் நிச்சயமாக வெற்றி பெரும் என் திறனை நான் காட்ட வேண்டிய நேரம் இது என டி.ஆர்.ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..