திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து…!! விபத்திற்கான காரணம்…?
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் இரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்த மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் உள்நோயாளிகள், உட்பட 500க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் இந்த விபத்தில் சிக்கி 2ஆண்கள், மூன்று பெண்கள், ஐந்து வயது சிறுவன் உட்பட 6 பேர் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.,
இந்த விபத்திற்கு காரணம் மின்கசிவு என்பது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தீ விபத்தில் யாரேனும் சிக்கி உள்ளனரா..? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..