களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு…!!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கனமழை நிலவரம் குறித்தும் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக, மழைநீர் தேங்காமல் இருக்க சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்..
அதனை தொடர்ந்து கன மழை முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார். அங்கு நடைபெறும் பணிகளுக்கு, இடையூறு ஏற்படாத வகையில் மழைநீரை விரைவாக அகற்றிடுமாறுக் கேட்டுக் கொண்டார்…
அதன் பின்னர் சேப்பாக்கம் தொகுதி, ஜி.பி.சாலை பகுதியில் சற்று நேரம் முன் ஆய்வு மேற்கொண்டார். வழக்கமாக தண்ணீர் தேங்குகிற பகுதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிற, ஜி.பி.சாலையில் மாநகராட்சிப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து சிற்றுண்டிகளை வழங்கினார்.
மேலும், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு, நீர் தேங்காமல் இருக்க அதிகாரிகளுடன் ஆலோசனைகளை செய்தார்.
அதனை தொடர்ந்து சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆறு கடலில் கலக்கின்ற முகத்துவார பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.. அதனை தொடர்ந்து கூவம் ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகின்ற விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்…
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வளைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். என பதிவிட்டுள்ளார்..
இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா., இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்..