வங்கக் கடலில் நிலைக்கு வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
மோக்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஆனது தற்போது வடக்கு வடமேற்கு திசையில் கடந்த ஆறு மணி நேரமாக 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தற்போது மேற்கு தென்மேற்கு திசையில் போர்ட் பிளேயருக்கு 510 கிலோமீட்டர் தொலைவிலும் , தென்மேற்கு வங்கதேசத்திற்கு 1210 கிலோமீட்டர் தொலைவிலும் , மியான்மருக்கு 1120 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது
தொடர்ந்து இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் வருகின்ற 14ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கரையைக் கடக்கும் போது 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-over-bay-of-bengal-intensified-into-cyclonic-storm-mocha
















