உயிரே.. உன்னை.. எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன்..!!
கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இவருக்கு நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவு இருந்த நிலையில் சக போட்டியாளர்கள் அவர் மீது சர்ச்சைக்குரிய வகையில் குற்றம் சாட்டி பிக் பாஸால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார்.
இந்த நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதீப் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு எளிமையான முறையில் சர்ச்சில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை பிரதீப் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இந்த பெண்ணை காதலித்து வந்தார் என்றும் அவர் பெயர் பூஜா என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
பிரதீப் – பூஜா தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..