“விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் ஏற்பட்ட பாதிப்பு” இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
விக்ரம் லேண்டருக்கும், பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிலவின் வளிமண்டலம் இல்லாத நிலையில், அதன் மீது ஏராளமான விண்கற்களும், பாறைகளும் அன்றாடம் மோதுவது வழக்கமாக உள்ளது. அப்படி நிலவில் மோதும் பாறைகள் விக்ரம் லேண்டர் அல்லது பிரக்யான் ரோவர் மீது மோதக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி மோதினால் விக்ரம் லேண்டர் அல்லது பிரக்யான் ரோவர் வெடித்து சிதறவும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் அப்பல்லோ விண்கலம் இதேபோன்ற பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், தற்போது விக்ரம் லேண்டர் அல்லது பிரக்யான் ரோவருக்கும் இந்த நிலை ஏற்படலாம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய மணிபால் இயற்கை அறிவியல் மையத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாக்டர் பி.ஸ்ரீகுமார், விண்கலம் பாதிக்கப்படும் அபாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.
நிலவில் வளிமண்டலமோ அல்லது ஆக்ஸிஜனோ இல்லை என்பதே இதற்குக் காரணம் என்றும், இருப்பினும், இரவில் கடுமையான குளிரால் அதன் மீது ஏராளமான விண்கற்களும், பாறைகளும் மோதக்கூடிய வாய்ப்பு இருப்பதால் விண்கலத்திற்கு கூடுதல் தீங்கு விளைவிக்குமா என்பது இன்னும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..