ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுதலாமா..? கர்நாடக அரசு வெளியீட்டுள்ள முடிவு..
ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுத கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக அரசுப் பள்ளியில் கடந்தாண்டு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இதனிடையே, சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்து ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா, கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடக தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தேர்வறையில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..