“குற்றப்பரம்பரை சட்டம்..” துணை முதலமைச்சர் பதிவு..!!
முத்து ராமலிங்க தேவர்.., ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் இருந்தவர் முத்துராமலிங்கதேவர். இன்று அவரது 117வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது..
இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்..
இந்திய நாட்டின் விடுதலைப்போரில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்.
வாய்ப்பூட்டு சட்டம், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடியவர்.
‘தமிழ்நாட்டின் நேதாஜி’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் 62-ஆவது குருபூஜை நாளில் அவரது பணிகளை போற்றுவோம்.