பாஜகவிற்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி..!!
சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்தப் போவதில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 94வது இந்திய எம்சிசி முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி பதக்கங்களை வழங்கி வீரர்களை கவுரவ படுத்தினார்.
பின் இதனை தொடர்ந்து பேசிய அவர் சனாதனம் குறித்து நான் பேசிய பேச்சால் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அமைச்சர் உதயநிதி, தான் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என சொல்லியதாக பாஜகவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
I.N.D.I.A. கூட்டணியின் மும்பை கூட்டம் வெற்றி அடைந்துள்ளதால் அதை திசை திருப்பவே பாஜகவினர் இது போன்ற பொய்களை பரப்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து பேசிய அவர்,
“சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமூகத்தில் எதுவுமே மாறாமல் எல்லாமே அப்படியே இருக்க வேண்டும் அதுவும் நிரந்தரமாக என வலியுறுத்துகிறது. மாறாக திராவிட மாடல் மாற்றத்தையும், சமூக சமத்துவத்தை வளர்க்கிறது. நான் சனாதன தர்மத்தைத் தான் எதிர்த்தேன். அதை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.
ஆனால் பாஜக பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது.., என் மீது எத்தனை வழக்குகளை பாஜக தொடுத்தாலும், அதை எதிர்க்க நான் தயாராகி விட்டேன். என அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..