“அரசு, தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம்..” தவெக கொள்கைகள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது..
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.. அவர்களை உற்சாக படுத்தும் விதமாக முன்னதாக கிராமிய இசைகள் இசைக்கப்பட்டது..
அதன் பின்னர் கட்சிக்கொடி பாடலுடன் மாநாடு தொடங்கியது., முன்னதாக பாரதியார், காமராசர், முத்துராமலிங்க தேவர், உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்..
அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது., அதனை தொடர்ந்து கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் வெங்கட்ராமன் வாசிக்க தவெக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்..
அதனை தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கபட்டது..
1. சாதி, மத, பாலினம் வேறுபாடற்ற மத சார்பாற்ற சமூக நீதி,
2. பெரியார் அம்பேத்கார் காமராஜர் வழியில் நடப்போம்,
3. அம்பேத்காரின் சாதி ஒழிப்பு.
4. போதையில்லா தமிழகம்..
5. மாநில, மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்
6. விகிதாச்சார இட ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி
7. எல்லா வகையிலும் ஆண்களுக்கு பெண்கள் சமம் உரிமம்
8. இரு மொழி கொள்கையே தவெகவின் மொழிக்கொள்கை
9. மாநில தன்னாட்சிக்குட்பட்ட உரிமைகளை மீட்பது
10. தமிழை வழக்காடு மொழியாக்குவது
11. பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்போம்
12. பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்போம்
13. அரசு, தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம்
14. சுற்று சூழல் மற்றும் இயற்கை வளங்களை 1 பாதுகாப்போம்..
என இவ்வாறு 14 கொள்கைகளை தவெக வெளியிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..