சர்ச்சை நடிகை கஸ்தூரி…!! ஐகோர்ட் அதிரடி முடிவு..!!
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான நடிகை கஸ்தூரியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என ஐகோர் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3ம் தேதி சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில். நடிகை கஸ்தூரி பங்கேற்றுள்ளார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் குறித்தும், அமரன் படத்தில் முகுந்த் வரதராஜன் பிரமினர் சமுகத்தை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்., இவரின் இந்த பேச்சுக்கு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பல்வேறு சமூகத்தினர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனால் கஸ்தூரி மீது மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொடர் புகார்கள் எழுந்ததது இதற்கிடையில் எழும்பூர் காவல்நிலையத்தில் அகில இந்திய தெலுங்கு ஜன சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது ௪ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் நடிகை கஸ்தூரி நேரில் ஆஜராகாமல் இருந்துள்ளார்., அவரை நேரில் சென்று விசாரணை செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது நடிகை கஸ்தூரி தலைமறைவானது தெரியவந்தது.. இதனால் கஸ்தூரியை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தன் வழக்கறிஞர் மூலம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி
ஆனந்த் வெங்கடேஷ் “ஒரு கல்வியாளர், சமூக ஆர்வலர் என சொல்லிகொள்ளும் நபர் இதுபோன்ற அவதூறாக பேசவது சரியா. கேள்வி எழுப்பி கஸ்தூரிக்கு கண்டனம் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்..
தற்போது இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது., அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜாமீன் மறுக்கபட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..