திருவாரூரில் தொடர் கனமழை…!! பரிதவிக்கும் மக்கள்…!!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது இதன் தொடர்ச்சியாக தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனிடையே திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட ஆத்தா குளம் தெருவில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் உள்ள குளம் நிரம்பி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது அப்பகுதி மக்கள் இது குறித்து தெரிவித்த போது
திருவாரூர் நகர் பகுதியில் உட்பட்ட ரயில்வே காலனி, பெரிய மில்தெரு, கே டி ஆர் நகர் பகுதிகள் வழியாக மழை நீர் ஆத்தா குளம் பகுதியில் நிரம்பி வீடுகளை தண்ணீர் சூழ்ந்து வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைந்து வருகிறது. எனவே உடனடியாக மழை நீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..