விஜய் மீது விழும் தொடர் விமர்சனம்..! நச் பதிலடி கொடுத்த ராதாரவி..!
நடிகர் ராதா ரவி, வனிதா விஜயகுமார் மற்றும் ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் “கடைசி தோட்டா” இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தலைவரும் நடிகருமான விஜய், நீட் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது
1975ம் ஆண்டுக்கு முன் வரை கல்வி மாநில பட்டியலில் மட்டும் தான் இருந்தது. உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் அது.. “ஒன்றிய அரசு வந்ததுக்கு அப்புறம் அது பொது பட்டியல் சேர்ந்தது” எனக்கு தெரிஞ்சு அதுதான் முதல் பிரச்சினையா நாம் பார்க்கணும்..
இரண்டாவது, பிரச்சனை என்பது ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள் ஒரே தேர்வு அதை அடிப்படையாக வைத்து தான் கல்வி கற்கும் நோக்கத்திற்கே ஒரு எதிரான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.,
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்றவாறு அந்த பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். அதை “நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை.. அந்த கல்வி முறையை பல்வேறு கண்ணோட்டங்கள் பார்க்கிறேன்.
இதில் பன்முகத்தன்மை என்பது அது ஒரு பலமே தவிர பலவீனம் என சொல்ல முடியாது. இன்னொரு ஒரு முக்கியமான ஒரு விஷயம்.. மாநில மொழியில் படிச்சிட்டு ஸ்டேட் சிலபஸ்ல படிச்சிட்டு.. என்சிஇஆர்டி சிலபஸ்ல வந்து தேர்வு வச்சா அது எப்படி..?
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததன் காரணமாக.. நம்பகத் தன்மையே போய்விட்டது.. அதற்கு “நீட் விலக்கு” மட்டும் தான் தீர்வு.. அதற்காக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனதார வரவேற்கிறேன். என பேசியிருந்தார்.
அதற்கு திமுக, காங்கிரஸ் கட்சியினர் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன் விஜய் திமுகவிடம் சரண்டர் ஆகி விட்டார் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பட்டது. அரசியலுக்கு ஒருவர் வருகிறார் என்றால் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுவது இயல்பு.. அதையெல்லாம் தாண்டி தான் ஒருவர் வர வேண்டும் என ராதா ரவி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு விட்டதா..? என்ற கேள்விக்கு பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்மநபர்களால் கொல்லப்பட்டார்.. அவரது மரணம் ரொம்பவே வேதனையளிக்கிறது. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட,என்றார்.
– லோகேஸ்வரி.வெ