மத்திய பிரதேசத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தது..
மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு அண்மையில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மிசோரத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் மற்றும் சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் கடந்த 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில், ஒரேகட்டமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதியில் வன்முறை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற டிமானி தொகுதியின் மோரீனா, மிர்கான் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
அதன்படி, மாலை 5 மணி நிலவரப்படி, சத்தீஷ்கார் மாநிலத்தில், 67 புள்ளி 34 சதவிகித வாக்குப்பதிவும், மத்திய பிரதேசத்தில் 71 புள்ளி 03 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post