உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்…!!
உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே, அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து சுரங்க திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு உடனடி தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஜனவரி 26ம் தேதி அரிட்டாபட்டியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..