கல்லூரி மாணவி தற்கொலை… இன்ஸ்டாகிராம் ஆல் நடந்த சோகம்..!
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், கல்லூரி முடிந்து விடு திரும்பிய மாணவி தனது அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டுள்ளார். பின்னர் அவரது சகோதரர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரமாக கதவை தட்டி திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது மாணவி தற்கொலை செய்து கிடந்தார். பின்னர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி மாணவியில் தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உயிரிழந்த மாணவி இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய புகைப்படத்தை மாஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளனர்.
இதனால் இரண்டு நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்

















