கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்..! என்ன காரணம் தெரியுமா..?
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா சிறு வயதில் இருந்தே வாகனம் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இந்த பெண் தந்தை மகேஷின் ஆட்டோவை வைத்து ஓட்டுநராக கற்றுக் கொண்டார்.
பின் தந்தைக்கு உதவ தந்தையின் ஆட்டோவை ஓட்டி ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்துள்ளார். பேருந்து ஓட்டுநராக வேண்டும். என்று ஆசை கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்களை ஓட்டி முறையான பயிற்சிகள் மேற்கொண்டு உரிமம் பெற்றுள்ளார்.
ஆண்கள் மட்டுமே ஓட்டும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் சாதனை படைக்க வேண்டும் என நினைத்த ஷர்மிளாவிற்கு குடும்பத்தினர் ஆதரவுடன்.., ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெற்றுக் கொண்டு வி.வி டிரான்ஸ் போர்ட் என்ற தனியார் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக சேர்ந்துள்ளார்.
கோவையின் பெண் ஓட்டுநராக பணி புரிந்த ஷர்மிளாவிற்கு பலரும் அவர்களின் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் “வானதி சீனிவாசன்” ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்து ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்கள் கூறினார்.
தி.மு.க துணை பொதுச் செயலாளரும்.., நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. இன்று காலை ஷர்மிளாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பேருந்தில் பயணித்துள்ளார். பின் அந்த பேருந்தில் பயணித்த பெண்களிடம் பேசிய திருமதி கனிமொழி. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த திருமதி கனிமொழி.., ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டி அணைத்துள்ளார்.
இப்படி பலரும் பாராட்டும் ஷர்மிளாவை விவி நிறுவனம் பணியில் இருந்து அவரை நீக்கியுள்ளது. இதுக்காரணம் குறித்து ஷர்மிளாவிடம் பேசிய போது.., ” திருமதி கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நடத்துனர் அவரை அவதூறாக பேசினார். எத்தனைபேர் வரீங்க, போறீங்க எதுவும் தெரிய மாட்டேங்குது ச்சை.., என்று அவர் பேசினார். யார் மனதையும் புண் படுத்தும் படி பேசாதீர்கள், கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்கள் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் நான் அப்படி தான் பேசுவன் என்று சொன்னார்.
இது குறித்து நான் முதலாளியிடம் சொன்னேன், அதற்கு அவரும் அவர் பேசியதில் என்ன தவறு நீங்க பிரபலம் ஆவதற்கு என்ன வேணா செய்வீங்க ஆனா நாங்க கேள்வி கேட்க கூடாதா.., என முதலாளி கேட்டார்.
அதற்கு என் அப்பா.. உங்களுக்கு தெரியாமலா திருமதி கனிமொழி வந்திருப்பார். உங்களுக்கு இது பற்றி முன்னரே தகவல் கொடுத்திருந்தார்களே பின் ஏன் இப்படி பேசுகிறீர்கள்.., என என் அப்பா கேட்டார், அதற்கு உங்க பொண்ண நீங்க கூட்டிகிட்டு போங்க என முகம் சுளிக்கும் வண்ணம் முதலாளி பேசினார்.
எனவே இனி அந்த இடத்தில் வேலை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு. அங்கிருந்து நின்று விட்டேன். விவி நிறுவன மேனேஜர் முதலாளியிடம் அனுமதி வாங்கி கொண்டு, திருமதி கனிமொழி அவர்களை வரவழைத்தார்.., வந்த பின் ஓட்டுநர் மனம் புண் படி பேசினார்.. அதை கேட்ட எங்களையும் அவதூறாக பேசி வெளியே அனுப்பி விட்டார்கள்.., நான் பணியில் இருந்து விலகியது உண்மை.
ஓட்டுநர் ஆக வேண்டும் என்பது என் கனவு.., மீண்டும் வேறு ஒரு இடத்தில் ஓட்டுநராக சேர்ந்து என் கனவை நிறைவேற்றிக் கொள்வேன் என கூறினார் ஷர்மிளா..