தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் அடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் பரவலான மழையும்.., ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் ஒரு தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக 24 மற்றும் 25ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் பரவலான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், ஒரு சில நகரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதி மற்றும் குமரி கடலில் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என எனவே இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post