சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றுக்கு அதன் சதுர மீட்டர் அளவுக்கேற்ப இக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில் அடுக்குமாடி கட்டங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சதுர மீட்டருக்கான கட்டணம் ரூ.198-ல் இருந்து ரூ.218 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி நடைமுறைக்கு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தெரிவித்துள்ளது.