செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று காலை 10 மணியளவில் சாலையை கடந்த 6 பேர் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இறங்கலைத் தெரிவித்து நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூ. 50,000-ம் நிதியுதவி வழங்கப்படும்” என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.