மதுரை மல்லிக்கு டப் கொடுக்கும் குழந்தைகள்..!! பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கே..!!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர் சிறுமியர்கள் கொண்டாட்டம்..
கிருஷ்ண ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.., பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது., “கிருஷ்ணர் என்பவர் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம்., யசோதா தாய்க்கு 8வது மகனாக பிறந்து கோகுலத்தில் வளந்தவர் தான் கிருஷ்ணர்..”
இன்றைய நாளில் நாம் கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் பூஜை செய்து வழிபட்டால்., கிருஷ்ணரே வீட்டிற்கு வந்து செல்வதாக ஒரு ஆன்மீக ஐதீக வரலாறு உண்டு அப்படியாக இன்றைய நாளில் குழந்தைகளுக்கும் வேடமிட்டு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது வழக்கம்
அந்த வகையில் மதுரையில் அனுஷத்தின் அணுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் எஸ்எஸ் காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இன்று மதுரையின் பல்வேறு பகுதியில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த அத்தனை கிருஷ்ணர் ராதைகளுக்கு ஆடிட்டர் சேதுமாதவா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதை தொடர்ந்து எஸ் எஸ் காலனியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் கிருஷ்ணர் ராதை சிலை மற்றும் ஸ்ரீ மகா பெரியவர் சிலை வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் குட்டி கிருஷ்ணர் ராதைகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவன நெல்லை பாலு செய்திருந்தார்