திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..! கலைஞரின் அரசியல் சாதனைகள்..!
“கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்” தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
மேலும் முதல்வர் எழுதிய மடலில் “நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.
அதனை தொடர்ந்து கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம். நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவரின் குறளை, திராவிட மாடல் இயக்கத்தின் சமூகநீதிக் குரலாக மாற்றியவர் தான் கலைஞ்சர்..
அதனை முன்னெடுத்து செல்லும் வகையில் மனித சமுதாயத்தில் ஓர் உயிர்கூட பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரிக்கப்பட்டு, தனது அடிப்படை உரிமைகளை காலம்காலமாக பறிகொடுத்துக் கொண்டே இருக்கக்கூடாது என்ற சமூகநீதியின் அடிப்படை கொள்கையாக மாற்றினார் கலைஞர் கருணாநிதி..
அதனை நடைமுறைக்கு கொண்டு வரும் விதமாக, ஐந்து முறை தனக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய போதெல்லாம் சமூகநீதிக் கொள்கையை இடஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவேன் என உறுதி அளித்திருந்தார்.. அதன் படி அதனை செயல்படுத்தினார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், சிறுபான்மை சமுதாயத்தினர் என அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் சமூகநீதிக் கொள்கையாக மாற்றி, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவினை இன்று 69% விழுக்காட்டிற்கு உயர்த்தி வைத்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் :
நம் தலைவருக்கு நாம் நன்றி தெரிவிக்கும் வகையில்.., தமிழ்நாட்டின் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாக தலைவர்களும் அவர்களது அலுவலகங்களில் உள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கலைஞர் நமது உள்ளத்திற்கு கொடுத்த உத்வேகத்துடன் நமது லட்சியப் பயணத்தை தொடர்வோம்.., மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம்” என் ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..