மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…!!
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்
வங்க கடலில் உருவான பெங்கள் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடக்க தொடங்கியது. இதனால் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை கன மழை பெய்தது.
அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்ததால் விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். முதல் கட்டமாக புயல் கரையை கடந்த மரக்காணம் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேர பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மீட்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்