முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!! பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!!
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 4 தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க காத்திருப்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.. மேலும் சென்னைக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது
குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 200 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால்., , தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகிறது..
அதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இன்று காலை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.. அதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கினார்..
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்டிருப்தாவது..
15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
15.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய தேதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்குச் சென்று, ஆயத்தப் பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
#NorthEastMonsoon-ஐப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான… pic.twitter.com/TV74Cb4sui
— M.K.Stalin (@mkstalin) October 14, 2024
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2 தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
ரொட்டி, குடிநீர் பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
B போக்குவரத்து பாதிக்கப்படும்போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
2 சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்..
மின் விநியோகம் சீராக இருக்க, கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளித்துப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
டீ மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள், JCB இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.
பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..