அமெரிக்க அதிபருடன் முதல்வர் ஸ்டாலின்..!! வைரலாகும் புகைப்படம்..!!
ஜி20 மாநாட்டை முன்னிட்டு இரவு விருந்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார், அதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் ஜி20 18வது உச்சிமாநாடு நேற்று தொடங்கியது . இதில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உணவு விருந்து வைத்தார்.
அந்த விருந்தில், பங்கேற்கபதற்காக மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் “ஸ்டாலின்” குடியரசுத் தலைவரின் விருந்தில் பங்கேற்றார். அது குறித்து “குடியரசு தலைவர் அளித்த ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில் காவேரி மேசையில் இருந்து பங்கேற்றேன்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அமெரிக்க அதிபர் “ஜோ பைடனை” சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு பக்கத்தில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இருந்துள்ளனர்.
Discussion about this post