ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்..! பொற்கொடிக்கு கொடுத்த வாக்குறுதி..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் கடந்த ஜூன் 5ம் தேதி இரவு 7மணி அளவில், 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர், செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின் பகுஜான் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி டெல்லியில் இருந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்குனர், மற்றும் நடிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பின் சென்னை மாநகராட்சி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததின் பெயரில் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் அதில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாகத் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லதிற்கு க்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
பின்னர் “ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..