முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணம்…!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்ல இருக்கிறார். அங்கு மாலை 4.30 மணி அளவில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார். இதனை அடுத்து நாளை காலை காமராஜ் கல்லூரிக்கு சென்று தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..