“வளர்தமிழ் நூலகம்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை மாவட்டந்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள ஆய்வு செய்தும், திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் ஏற்பாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலை கலையரங்க வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வளர் தமிழ் நூலகத்தையும், நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை.துணை வேந்தர் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..