பல்கலைக்கழக வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ன் படி தீர்ப்பளித்தது. தமிழக ஆளுநர் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.