மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், இவ்விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயவங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.