நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் முட்டையின் விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.இதன் விலைவான ஒரு முட்டையின் விலை 4.35 காசுகளாக உயர்ந்துள்ளது.
இதைப் போல் பல்லடத்தில் நேற்று கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.95 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் முட்டைக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆக உயர்ந்து உள்ளது.
Discussion about this post