“செஸ் என்றால் சென்னை..” வீரர் குகேஷ்-க்கு முதமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!
18-ஆவது உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ்க்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்., பாராட்டு விழா நடத்தியுள்ளார்..
அதன் பின்னர் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிய அவர், ஒட்டு மொத்த நாட்டிற்கும் – நம் தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடி தந்திருக்கும் SDAT-ன் ELITE வீரரான தம்பி குகேஷின் சாதனையை பாராட்டி, முதலமைச்சர் அவர்கள், ரூபாய் 5 கோடி பரிசுத்தொகை வழங்கி வாழ்த்தினார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பல நூறு குகேஷ்களை உருவாக்கிடும் வகையில், SDAT சார்பில் Home of Chess Academy-ஐ தொடங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்..
செஸ் என்றால் சென்னை, சென்னை என்றால் செஸ் என்கிற அளவுக்கு உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பிய தம்பி குகேஷின் வெற்றிப்பயணம் தொடரட்டும். தம்பி குகேஷ் இன்னும் பல சாம்பியன் பட்டங்களை, பதக்கங்களை குவிக்க அவருக்கு என்றும் துணை நிற்போம்.. என இவ்வாறே அவர் பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..