தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்…நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒருங்கிணைந்த சுகாதாரம்,கால்நடை உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க ஒரு புதிய முன்னுதாரணம் குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்…
பின் மேடையில் நிகழ்த்திய உரையில் ஒருங்கிணைந்த சுகாதாரம் குறித்தும்,விலங்கு மற்றும் மனிதர்களுக்கு உள்ள தொடர்பு அவைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பதிப்புகள் குறித்தும் கூறினார்…மேலும் கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அரசு வேலையை மட்டும் குறிக்கோளாக வைத்து செயல்படாமல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் படித்த துறையில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்…
பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,
கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு குரங்கு அம்மை,பன்றி காய்ச்சல்,ரேபிஸ் என பல்வேறு நோய்கள் வருகிறது…இது குறித்தும்,ஒருங்கிணைந்த சுகாதாரம் குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கபட உள்ளது… கொல்கத்தாவில் இருந்து ஒரு பெண்மணி தனது நாய்க்கு டியுமர் நோய் சிகிச்சை பெற நமது கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்..
சென்னை மாநகராட்சியில் 2018 ஆம் ஆண்டு 58 ஆயிரம் தெரு நாய்கள் இருந்த நிலையில் 5 ஆண்டுகளில் 1 லட்சம் நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது…தற்போது சென்னையில் 1.5 லட்சம் அளவிற்கு தெரு நாய்கள் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது என கூறினார்.. மேலும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 640 கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்… தெருவில் சுற்றி திரியும் மாடுகளின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது…
இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் எனவும் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் கழிவுகளை உட்கொள்கின்றன,கழிவு நீரில் திரிகிறது அதன் பால் நல்லதாக இருக்க வாய்பில்லை எனவே தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கூறினார்…
மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் எனவும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் எனவும் கூறினார்… சென்னையில் 4 புதிய கால்நடை மருத்துவ மையங்கள் உருவாகி வருகிறது…தெரு நாய் பிடிக்கும் என்றால் அதை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்…நாய்களுக்கு உணவை வீசி செல்லாதீர்கள் என அறிவுரை கூறினார்…