மருத்துவமனையில் அனுமதியில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர்..!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் கைது :
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வழக்கு தொடர்பாக கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மதுரை நீதிமன்றம் :
வழக்கை விசாரித்த மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சவுக்கு சங்கரை மே 22ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிகிச்சைக்காக சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..