“ChatGPT” தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி…!!
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி வருகின்ற ஜனவரி 31 தேதி நடத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்பட்டு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ளவும் மற்றும் முன்பதிவு செய்யவும் www.editn.in என்ற வலைத்தளத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..