14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டல காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால், மக்கள் கடும் வெயிலில் இருந்து தப்பித்து குளுகுளு என்ற சூழலில் இருந்து வருகின்றனர்.
அதேபோல், ஜூன் 7ம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கரூர்,திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பூர் போன்ற 14 மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-பவானிகார்த்திக்