தமிழக மக்களே உஷார் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறது.., சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கனமழை பெய்துள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 – 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 – 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக் கூடும்.
Discussion about this post