தமிழகத்தில் இன்று மே10 முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD Chennai) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: Chance of rain for 6 days in Tamil Nadu
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மே 10ம் தேதி முதல் வரும் மே12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மே13ம் தேதி முதல் 15ம் தேதி வரை சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெறிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே12-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும் என்று தெறிவிக்கபட்டுள்ளது. Chance of rain for 6 days in Tamil Nadu
தமிழகத்தில் நேற்று மே-9ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி வேலூரில் 4 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, திருச்சி மாவட்டம் பொன்னணியாறு அணை, திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டபட்டி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.