தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 20, 21இல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 22, 23ல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 23ல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தேனி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
தமிழ்நாட்டில் தெற்கு கடலோர பகுதிகளில் இன்று முதல் 21ம் தேதி வரை பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்று வீசும். நாளை, நாளை மறுநாள் கேரளம், கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…