16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!! ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு…!!
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்., அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது., அதனால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. இந்நிலையில்
வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் இன்று வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியும், உருவாக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
அதேபோல் அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்கு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும் அவை நகர்ந்து மேற்கு திசையை நோக்கி செல்லும் எனவும். மேற்கு, வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் இந்த காற்றானது செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
அதேபோல் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது..
அதேபோல் நாளை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
மற்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..