மத்திய அரசின் இலவச கேஸ் சிலிண்டர்..!! யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு எல்பிஜி எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக மே 2016 இல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
இது கிராமப்புற மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளான எல்பிஜி போன்றவற்றைக் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்? என்பதை பார்க்கலாம்:
விண்ணப்பிக்கும் நபர் 18வயது நிரம்பிய பெண்ணாகவும், இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். பட்டியல் சாதி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அல்லது பிற நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களும் இலவச எரிவாயு பெற தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதலில் https://www.pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று கேஸ் ஏஜென்சி விருப்பங்களைக் காண்பிக்கும் புதிய பக்கம் திறக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
ஏஜென்சியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்குரிய இணையதளத்தைப் பார்வையிடவும்.
உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களின் பட்டியலும் திரையில் தோன்றும். அருகிலுள்ள விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுத்து, “Continue” என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பவும்.
பிறகு விண்ணப்பப் படிவத்தை நகல் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள எரிவாயு நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.
உங்கள் பகுதியில் உள்ள எல்பிஜி எரிவாயு அலுவலகங்களுக்கு சென்று ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”