ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை..!!
சென்னையின் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜியான பொன் மாணிக்கம் வேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி அதிகாரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐஜி பொன் மாணிக்கம் வேல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக பொன் மாணிக்கவேல் மீது காதர் பாஷா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தொடர்பாக இன்று அவரது வீட்டில் சோதனை நடதப்பட்டு வருகிறது..
அதேபோல் கடந்த 2023-ம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதியக் கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.