ADHD பிரச்சனை வர காரணம்..! இதற்கு தீர்வு உண்டா..? உளவியல் மருத்துவர் சொன்னது..?
பிரபல மலையாள நடிகர்களின் ஒருவரான ஃபகத் ஃபாசில். மலையாள படங்களில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஃபகத் ஃபாசில் என்பதை விட பலருக்கும் நஸ்ரியா கணவர் என்று சொன்னாலே இப்போ உள்ள 2கே கிட்ஸ்களுக்கு தெரியும் என சொல்லலாம்.
Attention-deficit hyperactivity disorder (ADHD)
அப்படி இருக்க. சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தனக்கு கவனக்குறைவு, அதிக செயல் திறன் குறைபாடு கோளாறு Attention-deficit hyperactivity disorder (ADHD) இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்னை சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்படும், ஆனால் 41 வயதான எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய முடியுமா..? என டாக்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, ADHD என்ற பிரச்சனை குறித்து நம் மதிமுகம் உளவியல் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் கூறியதாவது..
“சமீபத்தில் இந்த ADHD பிரச்சனை பலருக்கும் உண்டு. இது ஒரு மனநல பிரச்னைகளை என சொல்லலாம். இந்த குறைபாடு உள்ளவர்கள் எந்த செயல் செய்தாலும், அதிவேகமாக செயல்படுவார்கள். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள், ஒரு இடத்தில் குறைந்த நேரம் அமைதியாக அமர்ந்து ஒரு செயலில் ஈடுபட முடியாமல் இருக்கும்.
எப்போதும் ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டே இருக்க ஆசைப்படுவார்கள். பெரும்பாலும், இந்த நோய் ஆண்களையே அதிகம் தாக்கும். இந்த பாதிப்பு ஏற்படுபவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், பெண்களை பொறுத்தவரை Inattention என்ற கவனமின்மை அதிகமாக இருக்கும். அதாவது ADHD குறைபாடு உள்ளவர்களுக்கு Hyper active, Impulsive, Inattention போன்ற குறைபாடுகள் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எழுதுவது, விளையாடும் போது பல செயல்களில் இந்த ADHD பிரச்சனை ஏற்பட்டால் நாம் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ADHD குறித்து தீர்க்கமாக கண்டறியப்பட்டு அனுபவம் வாய்ந்த உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, Developmental Pediatrics, Clinical Psychologists மருத்துவர்களைக் கொண்டு ADHD குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் உதவிகளை செய்ய முடியும். என சொல்லலாம். பொதுவாக நாம் குழந்தைகளை நாம் அடிப்பது, மிரட்டுவது போன்ற செயல்கள் மூலம் இந்த ADHD பிரச்சனை ஆரம்பமாகிறது. என மருத்துவர் அருள் சரவணன் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..