சாதி ரீதியாக ஏற்பட்ட மோதல்..! தக்காப்பட்ட மாணவர்கள்..! மீண்டும் நாங்குநேரியில் ஒரு..!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த மூன்றடைப்பு அருகே உள்ள மருதக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராள்மான மாணவர்கள் பயின்று வருங்கின்றனர்.
இந்தநிலையில் பொன்னாகுடி, மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நேற்று பள்ளி மோதல் ஏற்பட்டது. சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 12-ம் வகுப்பு இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்ட ஆசிரியர்கள், மாணவர்களை கலைந்துபோகச் சொல்லி அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த மாணவர்களை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், இப்பள்ளியில் அடிக்கடி சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் தொடர்பே இல்லாத மாணவர்கள் காயமடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர். பள்ளி வளாகத்திலே மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்