அவசர கால சேவைகளுக்கு மிகவும் அவசியமான வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு செல்வதுதான் முறை. இருப்பினும் சிலர் வழிவிடாமல் செல்வதால் பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது.அதனை தடுக்க தமிழக அரசு புதிய ஆணையை வெளியிட்டு உள்ளது.
ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் ரூ.10000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு முன் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் அவசர கால வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், அவருடன் பயணிப்பவர் மீதும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.