இயக்குனர் அமீர் மீது தொடரப்பட்ட வழக்கு..!! அமலாக்கதுறை வெளியிட்ட அப்டேட்..!! அந்த 20..?
பிரபல இயக்குனர் அமீர்.., வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்துவதாகவும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதாகவும் திரைப்பட இயக்குநர் அமீரை, கைது செய்யக்கோரி வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அதனால் ஜாபர் சாதிக் வீடு, ஓட்டல்கள் மற்றும் நண்பர்கள் வீடு, மற்றும் அலுவலகங்கள் என அவர் சென்ற இடங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்..
இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு 2ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் போதை பொருட்களை கடத்தி சென்ற வழக்கில், சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் ஜாபர் சாதிக் அளித்த தகவலின் படி, அவரது நெருங்கிய நண்பரான சதானந்த் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன் பின் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வாக்கு மூலம் வாங்கினார் .
அதில் போதை பொருட்களை விற்பனை செய்து பெற்ற பணத்தை திரைப்படத்திற்கும், புதிய ஓட்டல்கள் என முதலீடு செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் :
அதனை தொடர்ந்து ஜாபர் சாதிக் தயாரித்த திரைப்படங்கள் குறித்தும் அவருக்கு உதவிய துணை இயக்குனர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் தொழிலதிபர் அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம் ஆகியோருக்கு ஏப்ரல் மாதம் 2ம் தேதி டெல்லியில் உள்ள போதை தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதனால் இயக்குநர் அமீர் கடந்த 2ம் தேதி டெல்லியில் உள்ள போதை தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது வழக்கிற்கு அமீர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாவும், ஜாபர் சாதிக் போதை பொருட்கள் கடத்தல் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பண பரிமாற்றம் செய்து இருப்பதும் ஒப்புக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து தனது முற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
எனவே போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர், அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்திக் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் இல்லம், புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஜே.எஸ்.எம், ஓட்டல், கிழக்குகடற்கரையில் உள்ள ஓட்டல்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காபி ஷாப் மற்றும் தி.நகர் ராஜன் சாலையில் உள்ள, இயக்குநர் அமீர் வீடு , அலுவலகம், அடையார் சாஸ்திரிநகரில் உள்ள புகாரி ஓட்டல், மற்றும் அப்துல் பாசித் புகாரி வீடு, பல்வேறு தொழில் பார்ட்னர்களாக இருந்த சயத் இப்ராகிம் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
மேலும், ஜாபர் சாதிக்குடன் பணியாற்றிய மேலாளர்கள், உதவியாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..
அதேபோல், ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனம் பணம் உதவி மூலம் எடுக்கப்பட்ட ‘ஜாக்கி’ என்ற திரைப்படத்திற்கு அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரகு உட்பட அவருடன் பணியாற்றி வந்த 20க்கும் மேற்பட்ட பணியாளர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் :
இந்த சோதனையில் ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பணம் குறித்த விபரங்கள், மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள விபரங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் மூலம் எடுத்த திரைப்படத்திற்கு வாங்கிய ஊதிய கணக்கு விபரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க், மற்றும் பென் டிரைவ், வங்கி கணக்கு விபரங்கள் என அனைத்தும் தகவல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே இயக்குனர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு உதவிய அனைத்து நண்பர்களை அனைவரையும் கைது செய்யக்கோரியும் ஜாமீன் வழங்க கூடாது என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.