இப்போவே தயாரான கார் ஓட்டிகள்..!! வேளச்சேரி மேம்பாலத்தில் இப்போவே புக்கிங்..!!
சென்னையில் மழை பெய்தால் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி சுற்றுப் பகுதி உள்ளது.. இந்த பகுதியில் சாதாரண மழை பெய்தாலே வெள்ள நீர் சூழும் நிலை உள்ளதால், பெரு மழை காலங்களில் தங்களின் கார்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதாவதை தவிர்க்க வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்துவதை சென்னைவாசிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, மழை தொடங்குவதற்கு முன்னதாகவே பாலத்தில் கார்களுக்கு இடத்தை பிடித்து வருகின்றனர்.. தொடர்ந்து, வாகனங்களை நிறுத்தி வருவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளச்சேரி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியும் மக்கள் மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தினர்..
சத்யா.கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..